எழுத்தாளர் மேஜர்தாசன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பாக இந்த நுால் வெளிவந்துள்ளது. இதை சிறுகதைகள் என சொல்வதை விட, நம் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்கள், ஏற்படும் உணர்வுகளைத் தான், சிறுகதை வடிவில் மேஜர் தாசன் தந்துள்ளார். அதிலும், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம், திருநங்கை ஒருவர் பேசுவது, மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. இன்றைய சமுதாய சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் இந்த கதைகள், படிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.