மத்திய – மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான பாடநுால். கி.பி., 643ல் துவங்கிய, ஹர்ஷரது மன்னர் காலம் முதல், குத்புதீன் ஐபக் அரசராதல் வரையிலான மன்னர் வரலாறு, இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நுாலின் முதற்பகுதியில், இந்து மன்னர்கள் பற்றியும், அவர்களின் ஆட்சித் திறன் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதியில், முஸ்லிம் அரசர்கள் பற்றி கூறப்பட்டு உள்ளது. சந்தெல்லர்கள், கலச்சூரிகள், குகிலர்கள் என, வட மாநிலங்களை ஆண்ட, நாம் பெரிதும் அறியாத மன்னர் வம்சங்களையும் இந்நுால் பதிவு செய்துள்ளது.