படிப்பதிலும், கேட்பதிலும் அலுக்காத விஷயமாக இன்றும் இருப்பது, காஞ்சிப் பெரியவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்த செய்திகள் என்று துணிந்து சொல்லலாம்.
அண்மைக் காலத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவரைப் பற்றி, குறித்த அருமையான நுாலிது.
காஞ்சிப் பெரியவாளுக்கு, 14 மொழிகள் தெரியும் என்றும் (பக். 8), காஞ்சி மடத்தின் தலைவராக, 87 ஆண்டுகள் இருந்துள்ளார்.
தன் எதிரில் திரைப்படப் பாடல் பாடிய சிறுமியைப் பாராட்டியதும் (பக். 25), உணவைத் தரையில் அமர்ந்து உண்ணுவது தான் உணவு செரிப்பதற்கு உதவும் என்று சொன்னதும் (பக். 36), தன் மடத்தில் இருந்த விதவை
மூதாட்டிக்கு, அரசு தரும் முதியோர் பென்ஷனுக்கு சிபாரிசு செய்ய மறுத்தது (பக். 47) என, பல தகவல்கள் உள்ளன.
தனக்குக் கறுப்புக்கொடி காட்டியவர்களையும் அருகில் அழைத்து, அவர்களை ஆசீர்வதித்ததும் (பக். 91), சின்ன காஞ்சிபுரம் ஏழை அய்யங்காரின் வறுமையை, வழக்கறிஞர் ஒருவர் மூலம் தீர்த்து வைத்ததும் (பக். 102), படிக்கப் படிக்கச் சுவையாக இருக்கிறது.
– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து