பண்டைய காலந்தொட்டு உழவு மற்றும் நெசவு தொழில்கள் மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்தன. திரைகடலோடியும் திரவியம் திரட்டு என்பர். நாம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்நுால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் செய்பவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.