சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற குறுநாவல், ஈழத் தமிழர்களின் துயர வாழ்வை உணர்த்தி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. பல்வகை கருப்பொருட்கள், காலச்சூழல்கள், மனிதர்கள் உள்ளிட்டவை அடங்கிய வண்ணக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நுால்.