கடந்த, 1954 – 1962 வரை, கவியரசர், ‘தென்றல்’ எனும் கிழமை இதழை நடத்தினார். இதில் பலவிதமான படைப்புகளை கண்ணதாசன் எழுதி வந்ததோடு, கீர்த்தி மிக்க தமிழ் அறிஞர்களின் எழுத்தையும் வெளியிட்டார். அவ்வாறு வெளியான கட்டுரைகளில், மொழி உணர்வு குறித்த, 20 கட்டுரைகளை தேடிப்பிடித்து, ‘தென்றல் வளர்த்த தமிழ்’ என, தந்துள்ளார், ஆர்.பி.சங்கரன். தமிழின் மேன்மையை கவிஞர் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை இன்றைய இளைஞர்கள் இதை வாசிக்கும் போது உணர்வர் என்கிறார் சங்கரன். படித்துப் பாருங்கள். – எஸ்.குரு