கல்வி விஷயத்திலும்; கல்யாண விஷயத்திலும், தம் ஆசைகளை, பெற்றோர், தம் பிள்ளைகள் மேல் திணிக்கக் கூடாது என்ற நல்ல சேதியை இந்த நாவல் சொல்கிறது!
பிளாட்டினா என்ற பெண், வேணுவைக் காதலிக்கிறாள். வேணு மிகவும் கொடிய வியாதியால் அவதிப்படுகிறான். சின்ன வயதில், தான் கல்வியில் சிறந்து விளங்கவில்லை என்று, அவன் தற்கொலை செய்து கொள்ள, விஷ திரவத்தைக் குடிக்கிறான். டாக்டர்கள் அப்போது அவனைக் காப்பாற்றி விடுகின்றனர்.
ஆனால், அவன் பெரியவன் ஆன பின், அதன் பாதிப்பு இருக்கிறது! ரத்தமாக வாந்தி எடுக்கிறான். ஆனால், வேணுவின் நல்ல மனதுக்காக, பிளாட்டினா உயிருக்குயிராக நேசிக்கிறாள். பிளாட்டினாவின் அன்பும், டாக்டர்களின் விடா முயற்சியும் வேணுவைக் குணமாக்க – காதலர்கள் கல்யாண மேடை காண்கின்றனர்! குமார தேவி அருமையாக எழுதி உள்ளார்!
– எஸ்.குரு