ஐரோப்பிய எழுத்துலகில் பரவலாகப் பேசப்பட்ட, ‘இன்விசிபிள் மேன்’ என்ற நாவலின் தமிழாக்கம் இது. புவியரசு அருமையாக மொழிபெயர்த்து இருக்கிறார். எச்.ஜி.வெல்சின் கற்பனை நுால்கள் அறிவியல் அடிப்படை கொண்டவை.
நிலவுக்கான பயணம், வேற்றுலக வாசிகள் நம் பூமி மீது போர் தொடுத்தல், கால இயந்திரத்தின் மூலம் இறந்த காலத்திற்கும் செல்லுதல், மற்றவர் காணாமல் உலகத்தில் உலவுதல் என்றெல்லாம் கற்பனை செய்து பார்த்தவர் வெல்ஸ்.
கிரிபின் என்பவன் உடலை மறைத்து, உலவும் வித்தையைக் கற்கிறான். வன்முறையில் ஈடுபட்டதால் கொல்லப்படுகிறான். அற்புத நவீனம்!
–எஸ்.குரு