செவி, மெய், கண், வாய், மூக்கு ஆகிய ஐந்தும் சோத்திரம்; ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐந்தும் சத்தம்; சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகிய நான்கும் அந்தக்கரணம்; இவை முறையே நாடுதல், நினைத்தல், எழுதல், இறுத்தல் ஆகிய அறிவுத் தொழில் நிகழ்தற்குரிய அகப்புற கருவியாகும் என்ற கருப்பொருளை பதிவு செய்கிறது இந்நுால்.