மனித வாழ்விற்கு உண்ண உணவு முதல் தேவையாகும். உணவு தயாரிப்பதில், உண்பதில் எவ்வளவு கவனம் தேவை என்பதை இந்நுால் மிக அருமையாக விளக்குகிறது. பல உணவுப் பொருட்களையும் வீட்டிலேயே தயாரித்து உண்ண வேண்டும் என்றும், உணவே மருந்தாக நினைத்தால் வியாதிகள் வராது என்றும், உடல் ஆரோக்கியம் பெறத் தேவையான உணவுகளைக் கூறுவதும் இந்நுாலின் சிறப்பாகும்.
பழைய சோறின் அருமைபெருமைகளை விளக்குவதும், சமோசா வேண்டாம் என்பதற்கான காரணங்களை விளக்குவதும் (பக்., 29), இட்லி நல்லது ஏன்? எதற்கு? எப்படி? என்று விளக்கி உள்ளது அருமை.
இந்நுாலைப் படித்தால், நம் உணவுப்பழக்கமும் சீர்படும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து