தமிழ்ப்பாவை குறித்த, 30 பாடல்கள் எழுதி, அழகாக நுால் வடிவில் ஆசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது. மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இணைந்து இப்பாடல்களாக அமைந்துள்ளன.
விரும்பிய நாடுகள் யாவையும் பற்றித் திரும்பிய திக்கெலாம் பெற்றனை வெற்றி என, உலகம் முழுவதும் பரந்து பேசப்படும் மொழியாக திகழும் தமிழுக்கு பெருமை சூட்டியுள்ளார். பண்டைய தமிழரின் பெருமையை இன்றைய கீழடி ஆய்வும் வெளிப்படுத்துகிறது என, கவிதை வாயிலாக குறிப்பிட்டிருப்பது அருமை.
ஆண்டாளின் திருப்பாவை, கண்ணதாசனின் தைப்பாவை வரிசையில், கவிஞரின் தமிழ்ப்பாவையும் அனைவராலும் விரும்பி படிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
–மேஷ்பா