விவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர்.
உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு நீர் பாசனம் உள்ளிட்டவை அடங்கிய இந்நுால், மனிதன் நோய் நொடியின்றி வாழ்வதற்குரிய வித்துகளை விதைக்கிறது.