நவீன மொபைல் போன் மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகள், நம் நாட்டு இதிகாசங்களின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதிலும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை, ‘பகவத் கீதை’ என்ற பாடமாக நமக்கு தந்தவர் கிருஷ்ணர். இந்த நுாலில் இடம்பெறும் கிருஷ்ணரின் அவதாரத்தின் இளம் பருவ வரலாற்றை, சிறுவர்கள் மிகவும் விரும்புவர்.
குறும்புத்தனமும், வீரமும் நிறைந்த இந்த வரலாறு, சிறுவர்களின் மனதைக் கவர்ந்து, மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள துாண்டுவதாக அமையும். மேலும், சிறுவர் – சிறுமியருக்கு கதை சொல்வதற்கும் இந்த நுால் பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
– சிவகாமிநாதன்