‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு கர்மாவும், நம் தர்மத்தின் பலனாலேயே விளைகிறது. அதேபோல் இந்த கர்மாக்களே, நமக்கு தர்மத்தையும் ஏற்படுத்துகிறது’ என்கிறார், நுாலாசிரியர்.
தர்மத்துக்கு புறம்பான கர்மாவும், தர்மத்துக்கு உட்பட்ட கர்மாவும், உரிய பலனை தரும். இது தான், பாவ, புண்ணியம் என அழைக்கப்படுகிறது. அதனால், நல்ல புண்ணிய பலன்கள் கிடைக்கும் வகையில், நம்முடைய ஒவ்வொரு கர்மாவும் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
பல ஆன்மிக, உளவியல் புத்தகங்களை எழுதியுள்ள ஆசிரியர், வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகளை இந்த நுாலில் குறிப்பிட்டுள்ளார்.