சாவித்திரி என்ற பெயரை கேட்டவுடன், அனைவருக்கும், நினைவுக்கு வருவது, நடிகையர் திலகம் சாவித்திரி தான். அவர் நடித்த, பாசமலர், கைகொடுத்த தெய்வம், களத்துார் கண்ணம்மா உட்பட பல திரைபடங்கள், அவர்கள் மனதில் நிழலாடுமளவுக்கு, சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் சாவித்திரி.
வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக கூட வெளியாகியுள்ளது. அவரது வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை தொகுத்து, ஆசிரியர் வழங்கியுள்ளது, சிறப்பாக உள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி – சாவித்திரி இடையே இருந்த சகோதர பாசம், ஜெமினி – சாவித்திரி இடையே இருந்த அன்னியோன்யம் ஆகியவற்றை, ஆசிரியர் மிக அழகாக எழுதியுள்ளார்.
– சங்கர சுப்பு