பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில் கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது.
அதை எப்படித் தெரிந்து கொள்வது என வழிகாட்டுகிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின், அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி. இத்தகைய பக்தியை தான் அன்னை மீனாட்சி விரும்புவதாக ஆசிரியர் தன் பக்கங்களில் தன்னம்பிக்கை விதையை விதைத்துக் கொண்டே செல்கிறார்.
எரியும் தீயைப் போன்ற பிரச்னைகளின் நடுவில் இருந்து மீண்டு வர போராட வேண்டியது நம் வேலை. அந்த போராட்டத்திற்கான துணிவையும், சக்தியையும் இறைவனிடம் வேண்டலாம். அதிலும் புத்தகத்தை படிக்கும் போதே, பச்சைப்புடவைக்காரி... ஆசிரியர் வார்த்தைகளின் வாயிலாக நம்மையும் வழிநடத்திக் கொண்டே செல்கிறாள்.