மனிதர்களின் மேல் கருணை கொண்டு கனிந்த பழமாய் காட்சியளிப்பவர் காஞ்சிப் பெரியவர். எளிமையின் திருவுருவாய் இருந்தாலும், பிரச்னைகளின் தீட்சண்யத்தை உணர்ந்து பக்தர்களின் துயர் துடைப்பவர். எல்லாம் இறையே என்பது தான் அவரது சிந்தனை.
கீரையை ருசித்து சாப்பிடுவதால், அதை தினமும் நடைமுறைப்படுத்திய பணியாளரிடம், சாணி உருண்டையை வரவழைக்கச் சொல்லி சாப்பிட்டவர் காஞ்சிப்பெரியவர்.
பதறிப்போன பணியாளரிடம், கீரையும், சாணியும் ஒன்று தான் என்பதை என் நாக்கிற்கு உணர்த்தி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்ற போது, புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் நமக்கும் பாடம் கிடைக்கிறது.
–எம்.எம்.ஜெ.,