நடிப்புலகில் மட்டுமல்லாமல், அரசியலிலும் சிம்ம சொப்பனமாக அரியணை வீற்றிருந்தவர் ஜெயலலிதா என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவியின் ஆவேசமிக்க சொற்பொழிவுகள் எண்ணற்றவை. அவற்றில், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் குட்டிக் கதைகளின் தொகுப்பு இந்நுால்.
உதாரணத்திற்கு, ‘அறிவார்ந்த வள்ளல்’ என்ற கதையில், தமிழக மக்களின் ஆதர்சன கனவான, காவிரி நதி நீர் திட்டத்தின் சிறப்பைப் பற்றி கூறுவதாகும்.
இது போன்று, இந்நுாலில் அகர வரிசையில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும், மனித வாழ்வியலின் பல்வேறு கூறுகளை, நெறிகளை முன்னெடுத்து வைப்பதோடு, இன்றைய அரசியலுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் என்கிறார் நுாலாசிரியர்.
– மாசிலா இராஜகுரு