எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு புத்தகம் ஆன்மிகம் தொடர்பானது. ஸ்ரீ காஞ்சி மடம் என்பது மகா பெரியவர் என்ற ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் பெரிய விருட்சமாக வளர்ந்தது. நாத்திக வாதம் குறைய பல்முனை ஆன்மிக கருத்துக்களை மக்களிடம் பரப்பியவர்.
அவர் சீடர்கள் அளித்த தகவல்கள், ஸ்ரீ ஜெயேந்திரர் காட்டிய சில ஆதாரங்கள் அடிப்படையில், இப்புத்தகம் உருவானதாக ஆசிரியர் கூறுகிறார். இரண்டாம் பதிப்பாக மலர்ந்திருக்கிறது.
ஸ்ரீசங்கரர் துவக்கிய நான்கு மடங்களை (பக்கம் 26) வரிசைப்படுத்திய ஆசிரியர், இறுதியாக காஞ்சியில் சங்கரர் தங்கி மூல மடத்தை உருவாக்கியதாக இதில் உள்ளது. சங்கரர் காலமும் கிறிஸ்து பிறப்பதற்கு, 500 ஆண்டுகள் முந்தையது என்பதும், அதற்குப்பின் தொடர்ந்து இம்மடத்தை அலங்கரித்தவர்களையும் படங்களுடன் தந்திருக்கிறார்.
காஞ்சி மடத்து அன்பர்களுக்கு ஒரு வரப் பிரசாதமான நுால்.