ராமாயணத்தின் மூல நுாலாகக் கருதப்படும் வால்மீகி ராமாயணத்தை, பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டம் என, ஆறு காண்டங்களாக பிரிக்கப்பட்டு, சுவை குன்றாமல் படைக்கப்பட்டுள்ளது இந்நுால்.
வால்மீகியின் சீடர்களான ராமனின் குமாரர்கள் லவனும், குசனும் கதையை ராமனிடமே கூறுவது போன்று அமைந்த இந்த ராம காதையில், தெய்வப்பிறவி ராமனில் துவங்கி, வனவாசம் முடிந்து, சீதையை ராவணனிடம் போரிட்டு மீட்டெடுத்து, அக்னிப் பரீட்சை வைத்து, மீண்டும் அயோத்தி திரும்பும் ராமன், சீதையை அரியாசனத்தில் அமர்த்தி மகுடம் சூட்டியது வரை, இயல்பான நடையில் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் வடித்துள்ளார், ஆச்சார்யா.
நல்ல வடிவமைப்புடன் தலைப்புகளுக்கு ஏற்ப படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்நுால், படிப்பதற்கும், பிறருக்கு பரிசளிப்பதற்கும் ஏற்ற வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
– பின்னலுாரான்