தமிழில் அறுபத்து மூவர் கதைகள் என்னும் பெயரில் எழுதப்பட்டு, 1967ல் வெளிவந்துள்ளது. ஐம்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின் இந்த நுால் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இந்த அறுபத்து மூவர் வரலாற்றை எழுதுவதற்கு முன், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் படைத்த சேக்கிழார் வரலாற்றை இந்த நுால் விரிவாக எடுத்துக் கூறுகிறது.
இந்த நாயன்மார் வரலாற்றை விளக்கும் வகையில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய கறுப்பு வெள்ளைப் படங்களைத் தெளிவாக அச்சிட்டு, படக்கதை நுால் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களையும், பிறந்த மாதத்தையும், நட்சத்திரத்தையும் ஆங்கிலத்தில் அகரவரிசைப்படுத்தி அழகாகக் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளனர்.
தேவைப்படும் இடங்களில் தேவாரப் பாடல்களை வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது.
ஆங்கிலத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்டது போல் தெளிவான ஆங்கிலத்துடன் விளக்குவது தனிச்சிறப்பு.
– முகிலை இராசபாண்டியன்