விளம்பரம் இல்லாத உலகம் ஏது? நம்மைப் பற்றி மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவதும் ஒரு வகையில் விளம்பரம் தான். பூவுக்கும், நாருக்கும் மட்டுமல்ல... அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் விளம்பரம் பிரதானமாக உள்ளது. மார்க்கெட்டில் எத்தனை வகை பொருட்கள் இருக்கிறது என்பதை விட, எத்தனை பொருட்கள் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றன என்பது தான் முக்கியம்.
அந்த வகையில், உற்பத்தியாளர்களின் விளம்பரங்கள் பெற்ற வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, தோல்விக்கான காரணங்கள், விளம்பர கோட்பாடுகளுக்கான விதிகளை விரிவாக விவரிக்கிறது, ஆசிரியர் ரங்கராஜனின் அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள் புத்தகம்.
எதை செய்ய வேண்டும் என்பதை விட, எதை செய்யக்கூடாது என்பதை கற்றுக் கொள்வது தான் அடிப்படை பாடமாக இருக்கிறது என்பதை, விதிகளின் வாயிலாக தெளிவுபெற வைத்துள்ளார்.
– எம்.எம்.ஜெ.,