சி.ஆர்.ரவீந்திரனின் நாவல்களில் அங்குத்தாய் (1988), ஈரம் கசிந்த நிலம் (1992), காலம் (1994), வெயில் மழை (1995) ஆகிய நாவல்களை ஆய்வு செய்கிறார்.
பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெண்ணின் இளம் பிராயத்தில் எதிர்கொள்கிற சிக்கல்கள், காதல் வயப்படுகையில் எதிர்கொள்கிற சிக்கல்கள், திருமண வாழ்வில் உருவாகும் சிக்கல்கள், குடும்ப வாழ்வினுள் நேரும் சிக்கல்கள், பெண் பணியின் பொருட்டு, பணியிடத்தில் வெளி உலகினரை எதிர்கொள்ளும்போது நேரும் பணியிடைச் சிக்கல்கள், கணவனது ஒழுக்க மீறல், அதனால் மன முறிவு, மறுமணம் ஆகிய அனைத்தும் இந்நுாலில் பதிவாகி உள்ளன. விமர்சன இலக்கியப் பொக்கிஷம்.