சுகப்பிரசவம் இனி ஈஸி என நுாலுக்கு தலைப்பு தந்தது போலவே, பெண்களின், 10 மாத தவத்தையும், தவிப்பையும், பிரசவ நேரத்து வலியையும் எளிமையான எழுத்துக்களால் எளிதாக்கி இருக்கிறார் டாக்டர் கணேசன். எண்ணற்ற மருத்துவ நுால்கள் எழுதி உள்ள இவரின் புதுமை முயற்சி இந்த புத்தகம்.
பெண் கருவுறுதலுக்கு முன்பு துவங்கி, கருவுற்ற பின், 10 மாதம் எப்படி உடலை கவனிக்க வேண்டும் என்று அக்கறையோடு அறிவுரை தருகிறார்.
தொற்றுநோய்கள் எப்படி ஏற்படும், சத்தான உணவுகள் ஏன் சாப்பிட வேண்டும், அத்தனை சந்தேகங்களுக்கும் மருத்துவ ரீதியான பதில்கள் தரப்பட்டுள்ளன.
கருவுற்ற பெண்கள் மட்டுமல்ல, அவர்களை கவனிப்பவர்கள், கணவர் எல்லாரும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம்.
– ஜி.வி.ஆர்.,