புத்தக தேவைக்கு டோல் ப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளவும்: 1800 425 7700
‘அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்’கிலும் புத்தகம் கிடைக்கும்.
கடந்த இருபது வருடங்களாக திருப்பதி திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை, ‘தினமலர்’ இதழுக்காக படம் எடுத்துவரும், ‘தினமலர்’ புகைப்படக்கலைஞர் எல்.முருகராஜ், பிரம்மோற்சவ அனுபவத்தை தான் எடுத்த படங்களுடன் பதிவு செய்துள்ளதே, ‘பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவம்’ புத்தகம்.
பொதுவாக திருமலையில் வருடம் முழுவதும் திருவிழா தான் என்றாலும், வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பெருவிழாதான் பிரம்மோற்சவம் விழா. இந்த ஒன்பது நாட்களிலும் விலை உயர்ந்த நகைகளுடன், விதம் விதமான வாகனங்களில் சுவாமி வலம் வருவதும், அவருக்கு முன், பல்வேறு மாநில மக்கள் தங்கள் கலாசார உடையுடன் நடனமாடி செல்வதும் காணக் கண்கோடி வேண்டும் என்ற சொல்லத்தக்க காட்சியாகும்.
இந்த காட்சிகள் அனைத்தையும் புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதிலும் ஐந்து லட்சம் மக்கள் திரளும் கருட வாகனத்தை அட்டை படமாக தந்துள்ளது சிறப்பு.
பிரம்மோற்சவம் பிறந்த கதை, திருமலை நாதரின் முகத்தாடையில் ஏன் கற்பூரம் வைக்கின்றனர், பிரம்மோற்சவ பூங்காவில்
இருப்பது என்ன? என்பது போன்ற பல புதிய விஷயங்களை சுவைபட விவரித்துள்ளார்.
மொத்தத்தில் பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவம், கண்ணுக்கும் கருத்துக்கும் கிடைத்த திருப்பதி லட்டு எனலாம்.
– எம்.ராஜேஷ்