காந்தி அண்ணலின் வழியில், வன்முறை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க கூறும் தீபாவளி வாழ்த்துடன் மலர் துவங்குகிறது.
‘நின்னைச் சரணடைந்தேன்.. ’ என்ற பாரதியின் வைர வரிகள் தனக்கு பிடிக்கும் என்று காஞ்சி மட அதிபதி விஜயேந்திரர் கூறும் பேட்டி, ‘புகழ்பட வாழாதவன் நடைபிணம்’ என்ற நல்லிகுப்புசாமி செட்டியார் முதுமொழிக் கருத்து, ஆஸ்திரேலிய மாத்தாளை சோமு, எழுதிய பழந்தமிழர் கட்டுரையில், ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்ற திருக்குறள் அதன் விளக்கம் சிந்திக்க வைக்கும்.
கண்ணதாசனின் கவிதைத்தமிழ் நடை எல்லாராலும் போற்றப்படும் இன்பம் பயப்பது. அவர் மகாதேவி திரைப்படத்தில், ‘அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்ற அபூர்வ வசனத்தையும் காணமுடிகிறது.
விசாகப்பட்டினம் கிழக்கு கடற்கரையின் கோவா என்ற ராஜன் கட்டுரை அதிகரித்த ஆடம்பரச் செலவு குறித்த முன்னாள் வங்கியாளர் கோபால கிருஷ்ணன், நம் அன்றாட வாழ்வின் மாற்றங்களை எடுத்துரைப்பது சிறப்பாகும்.
அன்பு, சேவை ஆகியவற்றை புட்டபர்த்தி பாபா உபதேசித்த தகவல்கள் அடங்கிய கட்டுரை அவரை மீண்டும் மக்களிடம் அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.
மொத்தம், 230க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இத்தீபாவளி மலரில் பல சிறப்பான வண்ணப்பட கட்டுரைகள், சிறந்த துணுக்குகள், அறிவுக்கு விருந்தாகும் கவிதைகளுக்கு பஞ்சம் இல்லை.