பிற மத விரோதம் என்ற பக்கவிளைவு வராமல் பார்த்துகொண்டால், போதுமானது என்ற ஆசிரியர் முன்னுரையுடன் தொடங்கும் இம்மலர், பல்வேறு மதங்கள் இருப்பதும் இறைவனின் திட்டம் என்ற விளக்கமும் காணப்படுகிறது.
உலகின் வளர்ந்த நாடுகள் புவிவெப்பமயமாதலில் காட்டும் அலட்சியம் குறித்த பா.ம.க., தலைவர் ராமதாஸ் கட்டுரை நீண்டது.
வாரியார் பெருமையை சுவாமிகமலாத்மானந்தர் எழுதிய கட்டுரையில் உள்ள அழகு மயில் படம் குறித்த விஷயங்கள் கருத்தைக் கவரும். ஆனால், சில வரிகளில் வல்லின, மெல்லின எழுத்துகள் மாறிய வார்த்தைகளும் அடங்கி உள்ளன.
‘‘சம்பாதிக்க தெரிஞ்ச அளவுக்கு அதைக் காப்பாத்திக்கிற சாமர்த்தியம் எனக்கு இல்லாமல் போச்சு...’’ என்ற நடிகையர் திலகம் சாவித்திரி கருத்து பரிதாபத்தை ஏற்படுத்தும்.
சூறாவளி குறித்த அறிவியல் கதை, ஆன்மிகம் குறித்த 10க்கும் மேற்பட்ட வண்ணப்பட கட்டுரைகள், பழைய இலக்கியம் குறித்து இலங்கை ஜெயராஜ் உட்பட பலர் படைப்புகள், தற்கால இலக்கியம், கவிதைகள் ஆகியவை மலர் அதிக பொறுமையுடன் படிக்க வேண்டிய படைப்பாக எடுத்துரைக்கிறது.