மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள் மிகுந்துள்ள மனிதன் தன் மனித நிலையிலிருந்து உயர்ந்து, ‘மகான்’ எனும் உயர்ந்த நிலையை அடைகிறான். அத்தகைய உயர்ந்த நிலையை அடையும் சாதாரண மனிதனின் கதை தான் இந்த நாவல்.
நாவலின் தலைமை மாந்தர் வசந்தன். சித்தியின் அடியிலிருந்து தப்பித்து, வீட்டை விட்டு சிறுவயதிலேயே ஓடி வந்த வசந்தனின் வாழ்வில், உறவுகள் எப்படி மலர்ந்தன? அவன் எவ்வாறு மகான் ஆகிறான் என்பதை நாவல் எடுத்துச் செல்கிறது. பெண்ணின் திருமணம், அதற்காக அவள் தர வேண்டிய வரதட்சணை, அவள் திருமணமான பின்னர் படும் துயரம் என, பெண்ணின் வாழ்க்கை நிலையை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.
நல்ல கற்பனையோடு, எளிய உரையாடலும், வருணனையும் இணைந்து நாவலுக்கு மேலும் மெருகூட்டியுள்ளன. மனிதனை மகானாக்கும் முயற்சி இதன் மையக்கருவாகும்.
– முனைவர் கி.துர்காதேவி