வேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார்.
அம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும்.
இதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ராஜராஜ சோழன் முதலில் வாராகியை வழிபட்டு தான் போருக்குச் சென்றதை ஆசிரியர் வரலாறு பூர்வமாக விளக்குகிறார்.
முத்துவடுகநாதர் வாராகியின் பரம பக்தர். அவரின் பெருமையையும், அவருக்கு வாராகி அருளிய வரங்களையும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. பக். 62 காசி, படப்பை, இலுப்புக்குடி, பூவிருந்த வல்லி, மயிலை, திருவிடந்தை, காஞ்சி, அரியலூர், காளஹஸ்தி, திருவானைக்காவல், ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஸ்ரீமூஷ்ணம் என்று வாராகி உவந்து வீற்றிருக்கும் திருத்தலங்களை ஆசிரியர் பட்டியல் இடுகிறார்.
ஸ்ரீவாராகி அஷ்டகம், போற்றிகள், ஸகஸ்ர நாமாவளி, மூலமந்திரம், அனுக்ரகாஷ்டகம், பன்னிரு நாமங்கள், அஷ்டோத்திரம், தோத்திரம் என்று எல்லா தோத்திர நாமாவளி மகாமந்திரங்களையும், ஆசிரியர் தொகுத்துள்ளது பலருக்கு பயன் தரலாம்.
ஸ்ரீவாராகியின் படங்களுடன் கூடிய இந்நுால் அம்மன் உபாசகர்களுக்கும், அம்பிகையின் பக்தர்களுக்கும் அரிய பேழை!
– பேரருளாளன்