ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். தமிழன் ஒருவர், அன்னிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது, அவனுக்கு ஏற்படுகிற பிரச்னைகள், சுற்றுச்சூழல், வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் மனித உரிமை பிரச்னைகள் ஆகியவற்றை இச்சிறுகதைகளில் பிரதிபலித்துள்ளார். வாழ்க்கை, எத்தனை வகையான மனிதர்களை தம்மோடு இணைத்து செல்கிறது என்பதை விரிவாகக் கூறுகிறது, இவரது சிறுகதைகள்.