துவங்கியவுடன் படித்து முடித்து விடும் எண்ணத்தை தரும், 20 சிறுகதைகள் அடங்கிய நுால். துவக்கம், நடை, முடிப்பு என்ற எல்லா உத்திகளும் அமைந்துள்ளன. நடுத்தர வர்க்க குடும்ப நிகழ்வுகளை எளிய நடையில் கூறிச் செல்கிறார். நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு நீதியை விளக்குகிறது. – பேராசிரியர் இரா.நாராயணன்