அரசியல் அமைப்புச் சட்டத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நுால். பல நாட்டு அரசியல் சட்டங்களையும் எடுத்துரைக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை அப்போதைய சட்ட அமைச்சர் அம்பேத்கர் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழு உருவாக்கியது. அந்த குழுவின் புகைப்படத்தை புத்தகத்தில் வெளியிட்டிருப்பது சிறப்பு.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எளிமை பற்றியும் எழுதியுள்ளார். மோடியின் தாய், ‘108’ ஆம்புலன்சில், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றது உட்பட, மோடியின் சகோதரர்கள் மளிகை, பழைய பொருள் விற்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
அண்ணல் காந்தியடிகள், கர்ம வீரர் காமராஜர் உட்பட தலைவர்களின் எளிமை, நேர்மை, வாய்மையையும் விளக்கியுள்ளார். உலகளாவிய சட்டம் தொடர்பான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
– முகிலை ராசபாண்டியன்