அமெரிக்காவின் சிறுநகர் ஒன்றில் பள்ளியில் படித்துக்கொண்டே, வேலையும் செய்த, 14 வயது இந்தியச் சிறுவனின் கண்டுபிடிப்பு தான், இ – மெயில். மின்னஞ்சல் என்ற தகவல் நுட்பத்தை, விருதுநகர் மாவட்டம், முகவூர் கிராமத்தில் பிறந்த சிறுவன் கண்டுபிடித்தான் என்பது வியப்பு செய்தி. முதன்முதலில், ‘ஹலோ’ என்று செய்தி அனுப்பிய சிவாவின் பரவசத்தை விவரித்திருப்பது நெகிழ்த்துகிறது.
சிவாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நிரல்படத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வயதுக்கு மீறிய அறிவாற்றலை வியந்து, ஆரம்பக் கல்வி முதல், உயர்ந்த உயர்கல்வி வரையிலும் இந்தியச் சிறுவன் சிவாவின் மீது ஆசிரியர்கள் காட்டிய அன்பும், அக்கறையும் நெகிழ்ச்சியான சம்பவங்களோடு விவரிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடியால், பள்ளியில் படித்துக் கொண்டே தோட்டம் பராமரிக்கும் வேலையோடு வீடு வீடாகச் சென்று மர விதைகள் விற்றதும், பகுதிநேர வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றியதும் இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை. முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் சிவாவின் வாழ்க்கை ஒரு பாடம். படிக்கலாம்...
– மெய்ஞானி பிரபாகரபாபு