சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்கான தெளிவுரை, நேர்த்தியான மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பழமையையும், பெருமையையும், உரை நுால்கள் தோன்றிய வரலாற்றையும் அணிந்துரை தெளிவுபடுத்துகிறது.
ஒவ்வொரு காதையையும் தடித்த எழுத்துகளில் வெளியிட்டு, தொடர்ந்து பல பகுதிகளாகப் பிரித்து, தெளிவுரை எளிய நடையில் வழங்கப்பட்டுள்ளது. கடுமையான சொற்களைக்கண்டறிந்து, அவற்றிற்கான பொருளை ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் தனித்த அடையாளத்துடன் வழங்கியுள்ள முறை பாராட்டிற்கு உரியது.
சங்க இலக்கிய நுால்கள் அனைத்தையும் அழகிய உரையுடன் வெளியிட்டுள்ள கோவிலுார் மடாலயம், சிலப்பதிகார உரையை வெளியிட்டுத் தமிழ்த் தொண்டை தொடர்ந்து உள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்