அணியிலாக் கவிதை, முகையிலா வனிதை என்பது பழமொழி. உவமையணியின் தோற்றம் மிகவும் பழமையானது. 36 உவம உருபுகளை கூறுகிறது தொல்காப்பியம். அதில், ஒன்று தான், ‘போல’ என்ற உருபு.
வள்ளுவர் கூறும் உவமைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. முதல் குறளே எடுத்துக்காட்டு உவமையாக, வாழ்க்கையைப் பெருங்கடல் என விளக்க, பிறவிப் பெருங்கடல் என்று துவங்கும் குறளை காட்டுகிறார்.
அமுதத்தைவிடச் சுவையானதாக, குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால் அளாவப்பட்ட கூழ் என்று விளக்குகிறார். கிணற்றின் ஊற்றுநீருக்கு கல்வி கற்றலைக் கூறுவதும், பெண்ணுருவத்தில் வந்து போர் செய்யக்கூடிய விழியம்புகளே, கூற்றுவன் என்று கூறுவதையும் விளக்கியுள்ளார். வள்ளுவத்தை மேலும் அறியத் துாண்டும் நூல்.
– டாக்டர் கலியன் சம்பத்து