தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம், பேய், ஒற்றைக்கண் மனிதன், சீன ஒற்றர்கள், மீனழகி ஆகிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால்.
ஏற்கனவே தொடர்கதையாக வாசித்தவர்கள், இப்போது படித்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யும். எளிமையான உரைநடையைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவர் தமிழ்வாணன். அவர் எழுதிய வாக்கியங்கள் நான்கு, ஐந்து சொற்களுக்குள் இருக்கும். பல தொடர்கள் ஒரு சொல்லாகவே அமைந்திருக்கும். பேச்சுத் தமிழில் அமைந்துள்ளதால் எல்லாரும் எளிதில் படிக்க இயலும்.
மலரவன், இளஞ்செழியன், கண்ணியன், மாங்குடி மருதன், பாண்டியன் என தமிழ்ப் பெயர்களை சூட்டியுள்ளது இந்த நாவல்களில் காண முடிகிறது. நேர்த்தியாக தொகுத்து பதிப்பித்துள்ளார் லேனா தமிழ்வாணன்.
– முகிலை ராசபாண்டியன்