இறை உணர்வும், பக்தர் நலனையுமே பெரிதாக எண்ணி வாழ்ந்த மகான்கள், வெவ்வேறு வழித்தடத்தில் பயணித்தாலும், பக்தர்களிடம் காட்டிய அன்பும், கருணையும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. இந்நுாலில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. நம்பிக்கையுடன் தன்னை நாடி வந்தவர்களின் குறைகளை, இன்னல்களை, வேதனைகளை கருணையுடன் செவி மடுத்து, தங்களின் தவ வலிமையால், இறை ஆற்றலால் நீக்கி, அவர்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்கள். – என்.எஸ்.,