இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தாலும், பிற பாத்திரங்களையும் கவனமாகப் படைத்துள்ளார். மலையாள வாடை கலந்த ஒரு மொழிநடையைப் பேச்சு மொழியில் பயன்படுத்தியுள்ளது கனம் சேர்த்துள்ளது. சென்னைத் தமிழ் – அதிலும் கோடம்பாக்கம் தமிழும் கொலுவிருக்கிறது.
எப்போதோ நடந்த அரியலுார் ரயில் விபத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ரயில் விபத்தைக் காட்டி, தன் வரலாற்று அறிவுக்கு விளக்கம் தந்துள்ளார். சினிமாவில் இரண்டாம் நிலையில் நடிப்பவர்களும், துணை நடிகர்களும் அனுபவிக்கும் அனுபவங்களை அருகிலிருந்து பார்த்தது போல் படைத்துள்ளார். சினிமாவுடன் தொடர்புடைய செய்தி பலரை ஈர்க்கும் என்பது உண்மை தான் என்றாலும், இது சினிமாவின் திரைக்குப் பின்னால் சென்று, உள்ளத்து உணர்வுகளை விளக்கிக் காட்டுகிறது.
– முகிலை ராசபாண்டியன்