பல்சுவை கட்டுரை வகையைச் சார்ந்தது. அவற்றைச் சுவைபடத் தந்திருப்பதோடு அரிய தகவல்களையும் கொண்டுள்ளன. எடுத்துக் கொண்ட தலைப்புகளுக்கு ஏற்ற வகையில் நுாலாசிரியரின் எழுத்து, அவரது உழைப்பைக் காட்டுகிறது. பலரும் அறிந்திராத செய்திகளை ஆங்காங்கே பொருத்திக் காட்டியிருக்கும் கட்டுரையாளர், அவற்றை திறனாய்ந்தும், தக்க வகையில் கருத்துகளை எடுத்துக்காட்டியும் உருவாக்கியிருக்கிறார்.
பெண் கல்விக்கு முக்கியம் அளித்த அ.மாதவையா, சமூக சீர்திருத்தத்தில் அவரது பங்கு, அவரது படைப்பான, ‘கிளாரிந்தா’ பற்றிய விமர்சனம் ஆகியவை விரிந்த பார்வையில் தரப்பட்டுள்ளன. பலரும் அறியாத, அறிந்து கொள்ள வேண்டிய தகவல், சாமிக்கண்ணு பற்றிய தகவல்கள் அறியக் கிடைக்கின்றன.
பண்டைத் தமிழ் இலக்கியம் குறித்த செய்திகளும் புதுமையாக நோக்கப்பட்டுள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் திரை அனுபவங்கள் ஒரு சரியான பார்வை. அவசியம் படிக்க வேண்டிய நுால்.
– ராம.குருநாதன்