திறனாய்வு உலகத்தில் புதிதாக வந்துள்ளது இந்த நுால். ஐம்பத்தொன்பது நுால்கள் பற்றிய திறனாய்வுக் கருத்துரைகளின் தொகுப்பு. க.ப.அறவாணனின் காலத்திற்குப் பின் வெளிவந்துள்ளது. படைத்துள்ள திறனாய்வுரைகள் அனைத்தையும் தொகுத்து நன்கு வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.
தொடக்க நிலை எழுத்தாளர் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர் வரை பேதம் இல்லாமல் திறனாய்வு வழங்கியுள்ளார் அறிஞர் அறவாணன். தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் மகன்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.
ஒரே புத்தகத்தில் ஐம்பத்தொன்பது புத்தகங்களைப் படிக்க முடியும் என்பதற்கு இந்தத் திறனுரைகள் சான்று வழங்குகின்றன.
– முகிலை ராசபாண்டியன்