இன்றைய உலகின் அவசரத்தேவையும், சிக்கனமாக நாம் பயன்படுத்த வேண்டியதும் நீர் அன்றி வேறில்லை. நீரின்றி அமையாது உலகு. அது எப்படி என்று விளக்க இந்த நூலின் 21 கட்டுரைகள் போதும். மூத்த பத்திரிகையாளரான திருமலை நம் நாட்டின் ‘நீர் அரசியல்’ பற்றி, கேரளா, கர்நாடகாவிடம் நமக்கு நடக்கும் தண்ணீர் போர் பற்றி அருமையாக மூன்று கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார்.
கண்மாய்கள், ஆறுகளை காக்கும் அற்புத வழிகள், குடிநீரின் தேவை, நீர் மாசு என தண்ணீர் சார்ந்து இந்த நூல் பேசாத விஷயங்கள் ஏதுமில்லை. வெறுமனே மேம்போக்காக பிரச்னைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வுகளையும் எளிமையாக 9 கட்டுரைகளில் விளக்கி உள்ளார்.
நமது நிலமும், நீரும் வளம் பெற நினைப்பவர்கள் இந்த நூலை படிக்க வேண்டும்.
–
ஜிவிஆர்