தமிழிலக்கியங்களைப் பன்முகப்பார்வையோடு ஆய்வு செய்யும் நோக்கில், 13 கட்டுரைகள் நுாலை அணி செய்கின்றன. குறுந்தொகையும் ஆண் மொழியும் பெண் மொழியும், தமிழச்சி குறுங்காவியத்தில் பெண் விடுதலை, பழங்குடி பெண்களின் சுயாட்சி தன்மை உட்பட, ஏழு கட்டுரைகளை ரம்யா வரைந்திருக்கிறார். தொல்காப்பியர் உரிப்பொருளும் பொருந்தா மெய்ப்பாடும், கம்பனில் அருமறையாட்சி, வாணிதாசன் கவிதைகளில் பொதுவுடைமை உட்பட பல கட்டுரைகளை ஜவகர் எழுதியுள்ளார். பன்முக நிலையில் ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ள நுால். – ராமலிங்கம்