திரைப்பட வரலாற்றை உள்வாங்கிய அனுபவ வெளிப்பாடாக மலர்ந்துள்ள நுால். தொண்ணுாறுகளில் தமிழ் சினிமா வளர்ந்த விதத்தை, புதிய இயக்குனர்கள், நடிகர்கள், நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வளர்ச்சி நிலைகள், மதிப்புரைகள், ஆவணப் படங்கள் குறித்த செய்திகளை சிறப்பாக தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார். திரை ஆர்வலர்களுக்கு பயன் தரும். – ராமலிங்கம்