தமிழ் சமூக நிலையை சித்தரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 23 தலைப்புகளில் கதைகள் எழுதப்பட்டுள்ளன. அன்பே அமிழ்தம் துவங்கி, கொரோனா கொடுத்த உறவு என்பது வரை அனைத்து கதைகளும் அன்பையும், நெகிழ்ச்சியையும் மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகை மாதிரி கதாப்பாத்திரங்களை உள்ளடக்கியுள்ளன.
எளிய உரையாடல்கள் மூலம் கதைகள் நகர்கின்றன. சித்தரிப்பும் மிகவும் எளிமையாக அமைந்துள்ளது. எண்களை தலைப்பாக கொண்டுள்ள கதை ஒன்றும் உள்ளது. கதைகளின் முடிவில், வைர இலக்கியங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ள வரிகள் மிகப்பொருத்தமாக உள்ளன.