வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பது புரிந்து விடுகிறது.
கூடுதல் விளக்கமாக நாவலின் காலமாக 1950 என்னும் தகவலையும் தந்து விடுகிறார். நெசவாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடு நுாலாகவும், பாவு நுாலாகவும் இணைந்து இயங்குகிறது நாவல்.
ஏழ்மை வாழ்க்கையில் ஒரு நிறைவுடன் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளார். நடராஜன் என்ற பாத்திரத்தை, 43 அத்தியாயங்களில் நிலை நாட்டியுள்ளார்.
கதைப் போக்கில் 1950களின் அரசியல் நிகழ்வுகளை எடுத்துரைத்துள்ளார். தென் மாவட்டங்களில் ஓடம் என்று சொல்லும் ஊடு நுால் ஓட்டியை நாடா என்று குறிப்பிட்டுள்ளார். அது முன்பக்கம் ஒடுங்கி, மீன் போன்று அமைந்திருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
வட தமிழகத்துப் பேச்சு நடையை மிகுதியாகத் தெளித்துள்ளார்.
– முகிலை ராசபாண்டியன்