எட்டு பெருந்தலைப்புகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் அருமையான புத்தகம் இது.
விடுதலை வேள்வியில், சமூக சீர்திருத்தத்தில், அறிவியலில், அரசியலமைப்பு உருவாக்கத்தில், கல்வியில், கலையில், எழுத்தில் சாதித்த பெண்களை தேடி எழுதியுள்ளார் எழுத்தாளர் திருமலை. இதில் பல பெண்களின் வரலாறுகள் பரவலாக அறியப்படாதவை. அவற்றை அற்புதமாக ஆவணப்படுத்தியிருக்கும் நுாலாசிரியரின் உழைப்பு நுாலில் தெரிகிறது.
ஆற்றல்சால் பெண்கள் என்ற பெருந்தலைப்பில் எழுதப்பட்டிருப்பவர்கள் அனைவரும் ‘முதல்’ என்ற முத்திரை பதித்தவர்கள். பெண்களில் முதல் சபாநாயகர், முதல் தலைமை தேர்தல் அதிகாரி, முதல் பொறியாளர் என ‘முதல்’வரிசை, 25 ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது.
ஒரு ஆணின் பார்வையில் இருந்து பெண் ஆளுமையை நோக்கும் இந்த புத்தகம் பெண்களுக்கானது மட்டுமல்ல; பெண்களை கொண்டாடும் ஆண்களுக்கானதும் தான்.
– ஜி.வி.ஆர்.,