அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலமாகப் மாணவ – மாணவியருக்கு அறிவியலை எளிதில் சொல்லித் தரும் முயற்சியாக மலர்ந்துள்ள நுால். அறிவியல் தேசம் எக்ஸ்பிரஸ் என்னும் ரயில் சாகிபு, சுல்தான், சிந்து என்னும் மூன்று ரயில் இன்ஜின்களு டன், பூஜ்யம் பிளாட்பாரத்திலிருந்து பயணியராகிய மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்படுகிறது.
கீழடி, திப்பு சுல்தானின் ராணுவச் சிறப்பு, கல்லணை குறித்த செய்திகள், ஜந்தர் மந்தர், ஆரியபட்டா, சதுர்புஜ், ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்கா, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ, ஜார்க்கண்ட் மாநில ஜாரியா நிலக்கரிச் சுரங்கம், நாசிக், துாத்துக்குடி அனல்மின் நிலையம் என்றெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அறிவியல் எக்ஸ்பிரஸ், பல்வேறு சுவையான செய்திகளை விரித்துச் சொல்கிறது. அறிவியல் ஆர்வலர்கள் படிக்கத் தகுந்த நுால்.
– ராமலிங்கம்