‘மூலரொடு பதினெண்பேர் பரநாதாக்கள் துலக்கும் அந்தப் பதினெட்டு சித்தரையா’ இப்படி எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், யார் 18 சித்தர்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சிவனை முதல் சித்தராக்கி, சிவவாக்கியர் ஈறாக 29 சித்தர்கள் வரலாறு இதில் அடக்கம். பதினெட்டு சித்தர்கள் பற்றிய இரண்டாவது கட்டுரை ஆய்வு நோக்கில் உள்ளது. சித்தர்களின் சாகாக்கலை, அஷ்டமாசித்திகள் இப்படி சித்தர்கள் பற்றிய ஏராளமான தகவல்களை எழுதியிருக்கிறார்.
சித்தர்கள் வரலாறு மூலம் அவர்கள் பற்றிய தகவல்களை நினைவுகூர்ந்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.
– பின்னலுாரான்