சமூக புரட்சியாளர் அ.மாதவையா, ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள், அவர் மறைவுக்கு பின், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. மறு பதிப்பாக மூன்று நாவல்கள் ஒரே நுாலாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கிளாரிந்த், சத்தியானந்தன் ஆகிய நாவல்களை, சரோஜினி பாக்கியமுத்துவும், தில்லை கோவிந்தன் முதல் பகுதியை, வே.நாராயணனும்; இரண்டாம் பகுதியை, ஜோசப்குமாரும் மொழி பெயர்த்துள்ளனர். தமிழக வரலாற்றின் முக்கிய பகுதிகளை இந்த நாவல்கள் பேசுகின்றன. தமிழில் வந்துள்ள அரிய பொக்கிஷம். – பாவெல்