மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை. காந்தியின் அமுத மொழிகளை அனைத்து மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக்கொள்பவை.
இந்நுாலும் அந்த வகையில் அமைந்துள்ளது. கடவுள், தீண்டாமை, உழைப்பு, தியாகம், பணிவு, பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு, இயற்கை வைத்தியம் போன்ற தலைப்புகளில் பொன்மொழிகள் அமைந்துள்ளன.
மரணம் பேய் அல்ல; ஆவிகளுடன் பேச முடியுமா? யமனை கண்டு ஓடுபவரா? மறு பிறப்பு உண்டா? மரணத்திற்கு பின் தொண்டு போன்ற கேள்விகளுக்கு, காந்தி என்ன பதில் கூறினார் என்பது விளக்கப்பட்டு உள்ளது.
– டி.எஸ்.ராயன்